/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாண உற்சவம்
/
ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாண உற்சவம்
ADDED : ஜூலை 25, 2024 10:35 PM
உடுமலை : குறிஞ்சேரி பூமிலட்சுமி ஆண்டாள் நாச்சியார் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி, திருக்கல்யாண உற்சவம் ஆக., 7ல் நடக்கிறது.
உடுமலை அருகே குறிஞ்சேரியில், பூமிலட்சுமி ஆண்டாள் நாச்சியார் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு வழிபாடு ஆக., 4ம் தேதி முதல் நான்கு நாட்கள் நடக்கிறது.
முதல் நாளில், காலையில் கோ பூஜை, சுதர்சன ேஹாமம், தன்வந்திரி, மகாலட்சுமி மற்றும் குபேர ேஹாமம் நடக்கிறது. மாலையில் பஜனை நிகழ்ச்சி நடக்கிறது.
ஆக., 5, 6 தேதிகளில் காலையில் லட்சார்ச்சனை துவங்கி, மாலையில் நிறைவடைகிறது. வரும் 7ம் தேதி ஸ்ரீ ரங்கமன்னார் - ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சுவாமிகள் திருக்கல்யாண உற்சவம் காலை, 7:00 மணி முதல் நடக்கிறது. மாலையில் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமிகளின் திருவீதி உலா நடக்கிறது.

