/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அங்கன்வாடி கட்டடம் கட்டுமானம் மும்முரம்
/
அங்கன்வாடி கட்டடம் கட்டுமானம் மும்முரம்
ADDED : ஏப் 28, 2024 12:37 AM

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி முத்தையன் கோவில் பகுதியில், சங்கிலிப் பள்ளம் கரையை ஒட்டி அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. பல ஆண்டு முன்னர் கட்டிய கட்டடம் என்பதால் இந்த மைய கட்டடம் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டது.
இங்கு பயிலும் மாணவர்கள் மிகுந்த அச்சத்துடன் வந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் தங்கள் குழந்தைகளை இந்த மையத்தில் கொண்டு வந்து விட்டுச் செல்லும் நிலை காணப்பட்டது.
மிகவும் மோசமான நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை புதுப்பித்துக் கட்ட வேண்டும் என பெற்றோர் தரப்பில் கோரிக்கை எழுந்தது.அதனடிப்படையில், இங்குள்ள அங்கன்வாடி மையம் இடித்து அகற்றி, புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. பயன்பாட்டில் இருந்த கட்டடம் இடித்து அகற்றி புதிய கட்டடம் கட்டும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

