/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 15, 2024 01:34 AM

அவிநாசி: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி, அவிநாசி தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றிய தலைவர் வளர்மதி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுகன்யா வரவேற்றார். வட்டாரச் செயலாளர் இந்திராணி விளக்க உரை அளித்தார். மாவட்ட இணை செயலாளர் தனலட்சுமி கோரிக்கைகள் குறித்து பேசினார்.
விசைத்தறி தொழிலாளர் சம்மேளன சங்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி வாழ்த்துரை வழங்கினார்.
அதில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து கிரேடு 3 மற்றும் கிரேடு 4 அரசு ஊழியர்களாக முறைப்படுத்தி குறைந்தபட்ச ஊதியம் ஊழியர்களுக்கு 26,000, உதவியாளர்களுக்கு 21,000 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய பொருளாளர் மல்லிகா நன்றி கூறினார்.