/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஜெய் ஸ்ரீராம் அகாடமி பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா
/
ஜெய் ஸ்ரீராம் அகாடமி பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா
ஜெய் ஸ்ரீராம் அகாடமி பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா
ஜெய் ஸ்ரீராம் அகாடமி பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா
ADDED : ஆக 30, 2024 10:49 PM

திருப்பூர்;அவிநாசிபாளையம், ஜெய் ஸ்ரீராம் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விளையாட்டுப்போட்டிகள் நடந்தன. பள்ளி தலைவர் தங்கராஜ், துணைத்தலைவர் முத்து அருண் தலைமை தாங்கினர்.
பல்லடம் டி.எஸ்.பி., விஜிகுமார், அவிநாசிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவர்த்தனாம்பிகை ஆகியோர் மாணவ, மாணவியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர். பள்ளி முதல்வர்கள் கலைச்செல்வி, யமுனாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தடகளப்போட்டியில் 'கல்பனா' அணியினர் அதிகப்புள்ளிகள் பெற்று சாம்பியன் கோப்பையை வென்றனர். வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடந்தது. விழா ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக அலுவலர் சரவணன், விளையாட்டு ஆசிரியர்கள் ராஜா, நிஷா ஆகியோர் செய்திருந்தனர்.