/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
படகு சவாரிக்கு ஆண்டிபாளையம் குளம் தயார்
/
படகு சவாரிக்கு ஆண்டிபாளையம் குளம் தயார்
ADDED : செப் 09, 2024 12:25 AM

திருப்பூர்:திருப்பூர் - மங்கலம் ரோடு ஆண்டிபாளையம் குளத்தில், மாவட்ட சுற்றுலா துறை சார்பில், படகு இல்லம் அமைக்கும் பணிகள் ந முடிவடைந்துவிட்டன.
குளத்தில் சவாரி செல்வதற்கு, 4 பெடலிங் படகு; 2 மோட்டார் படகு; அன்னப்பறவை தோற்றம்கொண்ட 2 படகுகள்; மீட்பு பணிக்காக 2 மோட்டார் படகு என, பத்து படகுகள் ஆண்டிபாளையம் குளத்துக்கு வந்துள்ளன.அமையும்.
மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார் கூறியதாவது:
ஆண்டிபாளையம் படகு இல்லப் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டுவருகின்றன.
இரண்டு பேர் இயக்கும்வகையில் 2; நான்கு பேர் இயக்கும் வகையில் 2 என, நான்கு பெடலிங் படகுகள் உள்ளன. மோட்டார் படகில், டிரைவர் நீங்கலாக பத்துபேரும்; அன்னப்பறவை போன்ற படகில், இரண்டு பேர் வீதமும் பயணிக்கலாம்.
அவசர காலங்களில் பயன்படுத்துவதற்காக, 2 மீட்பு படகுகள் உள்ளன. அவற்றில், லைப்ஜாக்கெட் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வைக்கப்பட்டிருக்கும். மீட்பு பணிகளுக்காக, நீச்சல் வீரர்களும் தயார் நிலையில் இருப்பர்.
கலெக்டர் தலைமையில் படகுகள் இயக்கப்பட்டு விரைவில் வெள்ளோட்டம் பார்க்கப்பட உள்ளது. இம்மாத இறுதியில் படகு இல்லத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் பணிகளில் முனைப்புகாட்டிவருகிறோம்.பணியாளர் ஒன்பது பேர் தேர்வு செய்து, பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
---
ஆண்டிபாளையம் குளக்கரையில் உள்ள பூங்காவில், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் பொருத்தும் பணி நடக்கிறது.