/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில் நிலத்தை மீட்க வேண்டுகோள்
/
கோவில் நிலத்தை மீட்க வேண்டுகோள்
ADDED : ஜூலை 10, 2024 12:22 AM

திருப்பூர்:திருப்பூர் தெற்கு தாலுகா, தெற்கு டவுன் வார்டு -டி, பிளக் -6 மற்றும் 8, டி.எஸ்., -1,3,4 மற்றம் 2 ஆகிய இனங்களில், செல்லாண்டியம்மன் கோவில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கோவிலுக்கு சொந்தமான நிலத்தை கண்டறிந்து மீட்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து பக்தர்கள் சார்பில், உதவி கமிஷனர் அலுவலகத்தில் அளித்த மனுவில், ' நிலப்பதிவேடுகளை ஆராய்ந்து பார்த்து, கோவிலுக்கு சொந்தமான நிலமா என்பதை கண்டறிய வேண்டும். ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து, பொருளாதார இழப்பீட்டை வசூலிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, சொந்தமான நிலம் வேறு ஏதாவது பகுதியில் இருக்கிறதா என்பதையும் கண்டறிந்து மீட்க வேண்டும்,' என்று தெரிவித்துள்ளனர்.