/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சத்துணவு ஊழியர் பெருந்திரள் முறையீடு
/
சத்துணவு ஊழியர் பெருந்திரள் முறையீடு
ADDED : ஜூன் 26, 2024 12:34 AM

திருப்பூர்;தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று பெருந்திரள் முறையீடு நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் சந்திரகலா தலைமைவகித்தார். மாவட்ட செயலாளர் நாகராஜன், கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் உள்ள காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். கிராம உதவி யாளர்களுக்கு, மாதாந்திர ஓய்வூதியம் 6,750 ரூபாயை, குடும்ப ஓய்வூதியமாக வழங்கவேண்டும். பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை, சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்தவேண்டும்.
அனைத்து அரசு துறை காலிப்பணியிடங்களையும், பணி மூப்பு அடிப்படையில் முன்னுரிமை அளித்து, நிரப்பவேண்டும் என, கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் கோஷம் எழுப்பினர்.