/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
/
காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 26, 2024 10:45 PM
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், அரசு மருத்துவக் கல்லுாரி, அரசு மருத்துவமனை, மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், மாநகராட்சி, ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஏழு மருத்துவ அலுவலர், எட்டு செவிலியர், 16 சுகாதார ஆய்வாளர் (கிரேடு இரண்டு), மருத்துவமனை பணியாளர், சுகாதார ஊழியர், பாதுகாவலர், 31 பேர் உட்பட காலியாகவுள்ள 79 பணியிடம் நிரப்பப்பட உள்ளது.
மாவட்ட நலச் சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில், நிரப்பிடும் இப்பணிக்கு, ஜூலை, 3ம் தேதி மாலை, 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம், தகுதி விவரங்களுக்கு https://tiruppur.nic.in/notice category/recruitment என்ற வலைதள முகவரியை காணலாம்; கூடுதல், தகவல்களுக்கு 0421 2478503.
தகுதியானவர்கள் விண்ணப்பங்களை, 'நிர்வாக செயலாளர், மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலச்சங்கம், 147, பூலுவப்பட்டி பிரிவு, நெருப்பெரிச்சல் ரோடு, திருப்பூர் 641602 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்' என, கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.