/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓட்டு எண்ணிக்கை அலுவலர் நியமனம் ; தேர்தல் பிரிவு அதிகாரிகள் மும்முரம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் மும்முரம்
/
ஓட்டு எண்ணிக்கை அலுவலர் நியமனம் ; தேர்தல் பிரிவு அதிகாரிகள் மும்முரம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் மும்முரம்
ஓட்டு எண்ணிக்கை அலுவலர் நியமனம் ; தேர்தல் பிரிவு அதிகாரிகள் மும்முரம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் மும்முரம்
ஓட்டு எண்ணிக்கை அலுவலர் நியமனம் ; தேர்தல் பிரிவு அதிகாரிகள் மும்முரம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் மும்முரம்
ADDED : மே 11, 2024 12:27 AM
திருப்பூர்;திருப்பூர் லோக்சபா தொகுதியில், ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபட அலுவலர்கள், 700 பேர் நியமிக்கப்பட்டு, விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிக்கான தேர்தல், கடந்த ஏப்., 19ம் தேதி நடைபெற்றது. திருப்பூர் லோக்சபா தொகுதியில், மொத்தம் 16 லட்சத்து 8 ஆயிரத்து 521 வாக்காளர் உள்ளனர். இவர்களில், 70.58 சதவீதம், அதாவது, 11 லட்சத்து 35 ஆயிரத்து 267 வாக்காளர்கள், ஓட்டுப்பதிவு செய்துள்ளனர்.
ஓட்டுப்பதிவு செய்யப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், எல்.ஆர்.ஜி., மகளிர் கல்லுாரி ஓட்டு எண்ணிக்கை மையத்தில், சட்டசபை தொகுதி வாரியாக ஸ்ட்ராங் ரூம் அமைத்து வைக்கப்பட்டுள்ளன. வரும் ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் 23 நாட்களே உள்ளன.
ஓட்டு எண்ணிக்கைக்கு, அலுவலர்களை நியமிக்கும் பணிகளில், மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். எல்.ஆர்.ஜி., கல்லுாரி ஓட்டு எண்ணிக்கை மையத்தில், ஆறு சட்டசபை தொகுதிக்கும் தனித்தனியே ஓட்டு எண்ணிக்கை அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சட்டசபை தொகுதிக்கு 14 டேபிள் வீதம், மொத்தம், 84 டேபிள்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
ஒரு மைக்ரோ அப்சர்வர், ஓட்டு எண்ணிக்கை மேற்பார்வையாளர் ஒருவர், ஓட்டு எண்ணிக்கை உதவியாளர் ஒருவர் வீதம், ஒவ்வொரு டேபிளுக்கும் மூன்று அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
தபால் ஓட்டுக்கள், ஏழு டேபிள்களில் எண்ணப்பட உள்ளது. ஒவ்வொரு டேபிளிலும் தாசில்தார் நிலையிலான ஒரு கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில், ஓட்டு எண்ணிக்கை மேற்பார்வையாளர் ஒருவர்; ஓட்டு எண்ணிக்கை உதவியாளர் 2 பேர் வீதம் நான்குபேர் ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவர்.
700 பேர் நியமனம்
சர்வீஸ் வாக்காளர் பதிவு செய்த ஓட்டுக்கள், ஒரு டேபிளில் எண்ணப்பட உள்ளது. இதற்காக, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில், தலா ஒரு ஓட்டு எண்ணிக்கை அலுவலர், உதவி ஓட்டு எண்ணிக்கை அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
ஓட்டு எண்ணிக்கைக்காக, ஸ்ட்ராங் ரூமிலிருந்து - ஓட்டு எண்ணிக்கை அரங்கிற்கும்; ஓட்டு எண்ணிக்கை முடிந்து, ஸ்ட்ராங் ரூமிற்கும் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்வதற்காக, ஒரு தொகுதிக்கு, 50 பணியாளர் ஈடுபடுத்தப்படுவர்.
ஆறு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை பணிகளில், வருவாய்த்துறை, வட்டார கல்வி அலுவலர்கள், வங்கி அதிகாரிகள் 700 பேர் நியமிக்கப்படுகின்றனர். விரைவில் ஓட்டு எண்ணிக்கை அலுவலர்கள் நியமனம் முடிந்து, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக, தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.