/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொதுத்தேர்வுக்கான சிறப்பு வகுப்புகளில் சிற்றுண்டி அரசு பள்ளிக்கு பாராட்டு
/
பொதுத்தேர்வுக்கான சிறப்பு வகுப்புகளில் சிற்றுண்டி அரசு பள்ளிக்கு பாராட்டு
பொதுத்தேர்வுக்கான சிறப்பு வகுப்புகளில் சிற்றுண்டி அரசு பள்ளிக்கு பாராட்டு
பொதுத்தேர்வுக்கான சிறப்பு வகுப்புகளில் சிற்றுண்டி அரசு பள்ளிக்கு பாராட்டு
ADDED : பிப் 28, 2025 11:21 PM

உடுமலை, ; குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், மாணவர்கள் உடல்நலத்துடன் பொதுத்தேர்வுக்கு தயாராவதற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
மடத்துக்குளம் ஒன்றியம் குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை, 300க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.
அரசு பள்ளிகளில் பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த, பல்வேறு வழிகளை ஆசிரியர்கள் கையாளுகின்றனர். இப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மைக்குழுவினர் இணைந்து அதற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர். நடப்பாண்டில் இப்பள்ளியிலிருந்து, 67 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். மாணவர்களை முழுமையாக தேர்வுக்கு தயார்படுத்துவதற்கும், கற்றலில் பின்தங்கியவர்களை தேர்ச்சி பெற செய்வதற்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.
பள்ளி நேரம் தவிர, கூடுதலான நேரத்தில் இந்த வகுப்புகள் நடத்தப்படுகிறது. அந்த சமயத்தில், மாணவர்கள் பசியால் பாதிக்கக்கூடாதென பள்ளி மேலாண்மைக்குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஆசிரியர்கள் இணைந்து சிற்றுண்டி வழங்கி வருகின்றனர்.
பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கூறியதாவது:
மாணவர்கள் உடல்நலத்துடன் இருக்கும் போதுதான், தேர்வுக்கு செல்ல முடியும். மேலும், பொதுத்தேர்வில் சிறப்பாக செயல்படுவதற்கு, பள்ளி நிர்வாகத்தினர் மட்டுமில்லாமல், பெற்றோரின் ஒத்துழைப்பும் அவசியம் வேண்டும்.
இதன்படிதான் சிறப்பு வகுப்புகளில் மாணவர்களுக்கு சத்தான சிற்றுண்டிகள் தொடர்ந்து வழங்கி வருகிறோம். மாணவர்களும் மகிழ்ச்சியுடன் வகுப்புகளுக்கு செல்கின்றனர்.
இவ்வாறு கூறினர்.