/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி., கால்வாய் பராமரிப்பு பணிக்கு நுாறு நாள் திட்டத் தொழிலாளர்களா?

ADDED : ஆக 06, 2024 06:48 AM

திருப்பூர்: பி.ஏ.பி., இரண்டாவது மண்டல ஒட்டுமொத்த கால்வாய் சீரமைப்புப் பணிகளையும், நுாறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்வ தென, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பி.ஏ.பி., வெள்ள கோவில் கிளைக்கால்வாய் (காங்கயம் - வெள்ள கோவில்) நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது:
பிரதான கால்வாய், கிளை கால்வாய்கள் மற்றும் பகிர்மான கால்வாய்களையும் நுாறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் சீரமைப்புப்பணி மேற்கொள்ள, நீர்வளத்துறையினர் ஆலோசனை வழங்குவது ஏற்புடையதல்ல. நுாறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களால் பகிர்மான கால்வாய்களை சுத்தம் செய்வது என்பது, சுலபமான பணி அல்ல.
தேங்கியுள்ள மண், குப்பையை முற்றிலுமாக அகற்ற வேண்டும். அதன் இருபுற கரைகளில் உள்ள களைகளை அகற்ற வேண்டும். கரையோரம், வாகனம் செல்லும் சாலையை சுத்தம் செய்ய வேண்டும்.
பகிர்மான கால்வாய், 15 முதல், 18 அடி ஆழமுள்ள நிலையில், அதில் இறங்கி வயது முதிர்ந்த நிலையில் உள்ள நுாறு நாள் திட்டப் பணியாளர்களால் பணி செய்ய முடியுமா என்பது கேள்விக்குறி. எனவே, துறை ரீதியாகவே அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.