/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆறுமுகம் சுழற்கோப்பை கிரிக்கெட் பெருமாநல்லுார் அணி அபாரம்
/
ஆறுமுகம் சுழற்கோப்பை கிரிக்கெட் பெருமாநல்லுார் அணி அபாரம்
ஆறுமுகம் சுழற்கோப்பை கிரிக்கெட் பெருமாநல்லுார் அணி அபாரம்
ஆறுமுகம் சுழற்கோப்பை கிரிக்கெட் பெருமாநல்லுார் அணி அபாரம்
ADDED : ஜூலை 02, 2024 12:21 AM
திருப்பூர்:திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், ஆறுமுகம் சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
அவிநாசி டீ பப்ளிக் பள்ளியில் நடந்த போட்டியில், தோனி லேவன் அணி, 22.4 ஓவரில், 124 ரன் எடுத்தது. இலக்கை விரட்டிய குன்னத்துார் கிரிக்கெட் கிளப் அணி, ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 125 ரன் எடுத்து வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில், கே.பி.டி., சூப்பர் கிங்ஸ் அணி, 23.5 ஓவரில், 132 ரன் எடுத்தது. எதிர்த்து விளையாடி மாருதி அவெஞ்சர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி, 24.4 ஓவரில், எட்டுவிக்கெட் இழப்புக்கு, 133 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
பல்லடம், டி.எஸ்.ஆர்., கிரிக்கெட் அகாடமியில் நடந்த போட்டியில், பெருமாநல்லுார் கிரிக்கெட் கிளப் அணி, 25 ஓவரில், ஏழு விக்கெட் இழப்புக்கு, 190 ரன் எடுத்தது. இலக்கை விரட்டிய மூர்த்தி லேவன் அணி, 18.4 ஓவரில், 77 ரன்னுக்கு ஆல்அவுட்டாகியது; தோல்வியை தழுவியது. 113 ரன் வித்தியாசத்தில், பெருமாநல்லுார் அணி வெற்றி பெற்றது.
செந்தில் கிரிக்கெட் கிளப் அணி, 25 ஓவரில், ஆறு விக்கெட் இழப்புக்கு, 167 ரன் எடுத்தது. இலக்கை விரட்டிய ரைசிங் ஸ்டார் அணி, 22.3 ஓவரில், 139 ரன்னுக்கு ஆல்அவுட்டானது; 28 ரன் வித்தியாசத்தில், செந்தில் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது.