/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வயநாடு பொதுமக்களுக்கு உதவி; சேவா பாரதி அமைப்பு அழைப்பு
/
வயநாடு பொதுமக்களுக்கு உதவி; சேவா பாரதி அமைப்பு அழைப்பு
வயநாடு பொதுமக்களுக்கு உதவி; சேவா பாரதி அமைப்பு அழைப்பு
வயநாடு பொதுமக்களுக்கு உதவி; சேவா பாரதி அமைப்பு அழைப்பு
ADDED : ஆக 01, 2024 01:21 AM
திருப்பூர் : மண் சரிவால் பாதித்து, அவதிப்படும் வயநாடு பகுதி மக்களுக்கு சேவையாற்ற சேவா பாரதி அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து, அமைப்பினர் கூறியதாவது:
கேரள மாநிலம், வயநாடு பகுதியில் மிக அதிகமான கனமழை காரணமாக நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மக்களுக்கு உதவும் நோக்கில், அரிசி, கோதுமை மாவு, ரிபைன்ட் ஆயில், சேமியா பாக்கெட், பிஸ்கட், பிரெட், ரெடிமிக்ஸ் உணவு பொருட்கள், மளிகை பொருட்கள், பெட்ஷீட், டி-சர்ட், குழந்தைகள் ஆடைகள், புதிய துணிகள் தேவைப்படுகிறது.
இவற்றை கொடுக்க விரும்புவோர், திருப்பூர், மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகில், கல்யாணி பெட்ரோல் பங்க் ரோட்டிலுள்ள சிவாஜி மந்திர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம். சேகரிக்கப்படும் பொருட்கள், லாரி வாயிலாக, தினமும் வயநாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புக்கு : 0421 - 2214222, 93630 - 40697. இவ்வாறு அவர்கள் கூறினர்.