/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
8 மணி நேரத்துக்கு ஒருமுறையாவது... குழந்தைகளுடன் பெற்றோர் சந்திப்பு அவசியம்
/
8 மணி நேரத்துக்கு ஒருமுறையாவது... குழந்தைகளுடன் பெற்றோர் சந்திப்பு அவசியம்
8 மணி நேரத்துக்கு ஒருமுறையாவது... குழந்தைகளுடன் பெற்றோர் சந்திப்பு அவசியம்
8 மணி நேரத்துக்கு ஒருமுறையாவது... குழந்தைகளுடன் பெற்றோர் சந்திப்பு அவசியம்
ADDED : செப் 16, 2024 12:17 AM

''பெற்றோர் எட்டு மணி நேரத்துக்கு ஒருமுறை முடிந்தால், தங்கள் குழந்தைகளைச் சந்திப்பது அவசியம்'' என்று கூறுகிறார்
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, மனநல டாக்டர் சஞ்சய் போஸ்.
அவர் அளித்த பேட்டி:
குழந்தைகளை விட்டு, பணிக்கு செல்லும் பெற்றோர் முழு மனதுடன் பணிபுரிவது, 100 சதவீதம் கடினமானது. வீட்டில் சிறுவயது குழந்தை இருந்தால், அவர்கள் என்ன செய்கிறார்கள்; சாப்பிட்டார்களா, விளையாடிக் கொண்டிருக்கிறார்களா என்ற எண்ண ஓட்டமே மேலோங்கியிருக்கும்.பெற்றோருடன் இல்லாத குழந்தைகள், பாதுகாப்பில்லாத சூழலை உணரும். மன பதட்டம் வர வாய்ப்பு உருவாகும். அம்மா, அப்பா உடனிருக்கும் போது செயல்பாட்டுக்கும், அருகில் இல்லாத போதுமான செயல்பாட்டுக்கும் வித்தியாசம் நிறைய இருக்கும். தன்னம்பிக்கை குறையும்; ஒரு விஷயத்துக்கு முடிவெடுக்கும் போது யாரிடம் ஆலோசிப்பது என மனம் அலைபாய வாய்ப்பு உள்ளது.
எட்டு மணி நேரத்துக்கு
ஒருமுறை சந்தியுங்கள்
பணிபுரியும் பெற்றோர் தங்களால் இயன்ற வரை குழந்தைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும். எட்டு மணி நேரத்துக்கு ஒருமுறை முடிந்தால் இவர்களை சந்திக்க வேண்டும். பணிபுரியும் பெற்றோர் குழந்தைகளை சந்திக்க முடியாவிட்டால் சரிவர சாப்பிட மாட்டார்கள்; துாக்கமின்மை, போதியதாக இல்லாத போது, மனஅழுத்தம், பசியின்மை, அல்சர் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.
ஒருவர் பணிக்கு
செல்வதை தவிர்க்கலாம்
வளர்ந்து அவர்களாக விபரம் உணர்ந்து கொண்டாலும், பெற்றோர் உடனிருந்து கவனிப்பது போல் ஒரு சூழல் வராது. தெரிந்த/தெரியாத முகங்கள் மூலம், அவர்களை நம்பி விடும் போதும் கூட, சில குற்றச் செயல்கள் எளிதில் நடந்து விடுகிறது. எனவே, தாத்தா, பாட்டி பார்த்துக்கொண்டாலும், ஆயாக்கள், உறவினர்கள் உடனிருந்தாலும், குழந்தைகளுடன் பெற்றோர் உடனிருப்பது போல் இருக்காது. குழந்தைகள் பாதுகாப்பில் கவனமுடன் இருக்க வேண்டுமெனில் பெற்றோரில் யாராவது ஒருவர் பணிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இளமையில் அவர்கள் பாதுகாப்பை உணர்ந்தால் தான்; நேர்மறையாக வளர்வார்கள்.இவ்வாறு, சஞ்சய்போஸ் கூறினார்.----------------------

