/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அத்திக்கடவு - அவிநாசி திட்ட சாதனை 52 ஆண்டுக்குப் பின் நெல் விவசாயம்
/
அத்திக்கடவு - அவிநாசி திட்ட சாதனை 52 ஆண்டுக்குப் பின் நெல் விவசாயம்
அத்திக்கடவு - அவிநாசி திட்ட சாதனை 52 ஆண்டுக்குப் பின் நெல் விவசாயம்
அத்திக்கடவு - அவிநாசி திட்ட சாதனை 52 ஆண்டுக்குப் பின் நெல் விவசாயம்
ADDED : மார் 08, 2025 11:06 PM
திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு மாவட்ட மக்களின், 60 ஆண்டு கால கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் வாயிலாக, 1,045 குளம் குட்டைகளில் நீர் நிரப்பபடுகிறது.
அவ்வகையில், திருப்பூர் ஒன்றியம், மேற்குப்பதி ஊராட்சியில் உள்ள தொரவலுார் குளம் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது. இத்திட்டம் வரும் முன், நிலத்தடி நீர் மட்டம், ஆயிரத்து 200 அடிக்கு கீழ் இருந்தது. தற்போது நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலர் நெல் சாகுபடி மேற்கொண்டுள்ளனர்.
இதனை பார்வையிட்ட திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது:
தொரவலுார் வட்டாரத்தில் நெல் விவசாயம் நடந்து, 52 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது முன்னாள் முதல்வர் பழனிசாமியின் முயற்சியால், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் செயல்பாட்டு வந்ததோடு, நெல் விவசாயமும் நடந்து வருகிறது. இதுதவிர காய்கறி விவசாயம் உள்ளிட்ட பல்வேறு விவசாயங்களும் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமின்றி, ஆசியாவிலேயே இத்திட்டம் சிறந்ததாகும். மீண்டும் பழனிசாமி முதல்வரானதும், திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகள் சேர்க்கப்படும். திட்டத்தில் சரியாக நீர் வராத குட்டைகளில் தனிக் கவனம் செலுத்தி குறைகளை நிவர்த்தி செய்யப்படும். குளம் நிரம்பி உள்ளதால் மீன் பிடி தொழிலும் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் பெருமிதத்துடன் கூறினார். திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார், அ.தி.மு.க., நிர்வாகிகள் சங்கீதா, வேல் குமார், சந்திரசேகர், ஐஸ்வர்ய மகாராஜ், கிராமிய மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தொரவலுார் சம்பத்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.