/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் விரைவில் செயல்பட எதிர்பார்ப்பு
/
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் விரைவில் செயல்பட எதிர்பார்ப்பு
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் விரைவில் செயல்பட எதிர்பார்ப்பு
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் விரைவில் செயல்பட எதிர்பார்ப்பு
ADDED : ஆக 03, 2024 10:16 PM

திருப்பூர்:மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் கனமழையால், பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ள நிலையில், அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நடைமுறைக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு, விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில், 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டும் வகையிலான அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் நிறைவு பெற்று, வெள்ளோட்டமும் பார்க்கப்பட்டது. திட்டம் செயல்பாட்டுக்கு வருவதில் தாமதம் நிலவுகிறது.
அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் கூறியதாவது:
பவானி ஆற்று நீரை ஆதாரமாக கொண்டே, திட்டம் செயல்பாடுக்கு வரவுள்ளது. நீலகிரி, மாயாறு உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை, பவானி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் தற்போது பருவமழை பெய்து வருகிறது.
திட்டத்தின் கீழ், ஆறு மோட்டார் வாயிலாக நீர் செறிவூட்டப்பட வேண்டிய நிலையில், மூன்று மோட்டார் இயக்கும் அளவுக்கு தான், நீர் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சில மாதம் வெள்ளோட்டப்பணி எதுவும் பார்க்காததால், ஆங்காங்கே குழாய் உடைப்பு, நீர் கசிவு போன்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன; தொடர்ச்சியாக, நான்கைந்து நாட்கள் மழை நீடித்தால் வெள்ளோட்டம் பார்க்கும் பணி தொடரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த, 2016 பிப்., 19ல், இத்திட்டம் தொடர்பாக அரசாணை போடப்பட்ட நிலையில், செயல்பாட்டுக்கு வருவதில் இழுபறி நீடிக்கிறது. விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்கும் கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. திட்டப்பணியை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.