/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் கொங்கு நாடு விவசாயிகள் கட்சி வரவேற்பு

ADDED : ஆக 18, 2024 12:21 AM
திருப்பூர்:அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்துக்கு கொங்குநாடு விவசாயிகள் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.
கொங்குநாடு விவசாயிகள் கட்சி மாநில தலைவர் கொங்கு முருகேசன்,  மாநில பொது செயலாளர் கொங்கு ராஜாமணி ஆகியோர் கூறியதாவது:
முதன்முதலில், 1957ல் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கான போராட்டம் துவங்கியது. இத்திட்டம் வாயிலாக கோவை, திருப்பூர், ஈரோடு என, மூன்று மாவட்டங்களில் உள்ள, 1,045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பப்பட உள்ளது.
இதன் வாயிலாக, நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள, 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.ஏறத்தாழ, 65 ஆண்டுகளுக்கு மேலான விவசாயிகளின் போராட்டம் வீண் போகவில்லை; இத்திட்டம், இன்று கண்கூடாக நிறைவேறியிருப்பது, மகிழ்ச்சியளிக்கிறது.
திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், பல ஆண்டு கால விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, இத்திட்டத்திற்கு, 1,600 கோடி ரூபாய் ஒதுக்கி, கடந்த, 2019ல் அடிக்கல் நாட்டிய அப்போதைய முதல்வர் பழனிசாமி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.