/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
களவுபோகும் அத்திக்கடவு திட்ட உபகரணங்கள்; 'காயலான்' கடைகளை கண்காணிக்க எதிர்பார்ப்பு
/
களவுபோகும் அத்திக்கடவு திட்ட உபகரணங்கள்; 'காயலான்' கடைகளை கண்காணிக்க எதிர்பார்ப்பு
களவுபோகும் அத்திக்கடவு திட்ட உபகரணங்கள்; 'காயலான்' கடைகளை கண்காணிக்க எதிர்பார்ப்பு
களவுபோகும் அத்திக்கடவு திட்ட உபகரணங்கள்; 'காயலான்' கடைகளை கண்காணிக்க எதிர்பார்ப்பு
ADDED : மார் 06, 2025 06:23 AM

திருப்பூர்; அத்திக்கடவு - அவிநாசி நீர்செறிவூட்டும் திட்டத்தின் கீழ், குளம், குட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு உபகரணங்கள் திருடு போகின்றன. 'அத்தகைய பொருட்களை வாங்க கூடாது' என, பழைய இரும்பு விற்பனை செய்யும் கடைகளுக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டும்' என, அத்திக்கடவு ஆர்வலர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கி, 1,916 கோடி ரூபாய் செலவில் அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் நிறைவேற்றப்பட்டு, நீர் செறிவூட்டும் பணிகள் நடந்து வருகின்றன. மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுநீரை மையமாக வைத்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்துக்கென கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில், 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டுவதற்காக, 1,065 கி.மீ., நீளத்துக்கு நிலத்தடியில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது; ஆறு நீரேற்ற நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது குளம், குட்டைகளுக்கு நீர் செறிவூட்டும் பணி நடந்து வருகிறது.
குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டும் பணியை தானியங்கி தொழில் நுட்பத்தில் கண்காணிக்க, 'சென்சார் உபகரணங்கள்' பொருத்தப்பட்டுள்ளன. இந்த உபகரணங்கள் உட்பட, குளம், குட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள சில இரும்பு குழாய் உள்ளிட்ட பிற உபகரணங்களை, சிலர் திருடிச்சென்று விடுகின்றனர்.
இது குறித்து அத்திக்கடவு - அவிநாசி திட்ட ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், 'அவிநாசி, சங்கமாங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள திட்டம் சார்ந்த குழாய் மற்றும் உபகரணங்களை திருட சிலர் முயற்சி செய்துள்ளனர். எனவே, உபகரணங்கள் திருடு போவதை தவிர்க்க, அப்பகுதியில் தடுப்பு அமைக்க வேண்டும்.
அதே நேரம், விலைமதிப்புள்ள உபகரணங்கள் திருடுவோர், பழைய இரும்பு விற்பனை செய்யும் கடைகளில், விலைக்கு அவற்றை விற்பனை செய்வர் என்பதால், 'அத்தகைய பொருட்களை வாங்கக் கூடாது' என, பழைய இரும்பு விற்பனை செய்யும் கடைக்காரர்களுக்கு, அந்தந்த பகுதியில் உள்ள போலீசார் மூலம், அறிவுறுத்தல் வழங்க வேண்டும்' என்றனர்.