/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிழலுக்கு ஒதுங்கிய ஆசிரியர் மீது தாக்குதல்
/
நிழலுக்கு ஒதுங்கிய ஆசிரியர் மீது தாக்குதல்
ADDED : மார் 06, 2025 09:50 PM
உடுமலை; உடுமலையில், நிழலுக்கு ஒதுங்கிய ஆசிரியரை தாக்கிய ஆட்டோ டிரைவர் மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆசிரியர்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.
உடுமலை பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியராக உள்ள முனியப்பன். 37. நேற்று முன்தினம் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்வதற்காக, உடுமலை பஸ் ஸ்டாண்ட்டிற்கு வந்துள்ளார்.
அங்கு, ரோட்டில் ஆட்டோ டிரைவர்கள் அமைத்திருந்த நிழற்கூரையில், வெயிலுக்கு ஒதுங்கியுள்ளார்.
அப்போது, அங்கு வந்த ஆட்டோ டிரைவர் ஜாகிர் உள்ளிட்டோர், உள்ளே எதற்கு, ஷூ காலில் வந்துள்ளாய், என தகாத வார்த்தைகளில் திட்டியதோடு, தாக்கியுள்ளனர்.
இது குறித்து ஆசிரியர் உடுமலை போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் கண்டு கொள்ளாததால் அதிருப்தியடைந்த, ஆசிரியர்கள் நேற்று உடுமலை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.