/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டாஸ்மாக் மதுக்கடையை உடைத்து திருட முயற்சி
/
டாஸ்மாக் மதுக்கடையை உடைத்து திருட முயற்சி
ADDED : ஆக 06, 2024 06:07 AM
உடுமலை: உடுமலை அருகே, டாஸ்மாக் மதுக்கடையை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உடுமலை அருகேயுள்ள எலையமுத்துாரில், டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு, விற்பனையை முடித்து விட்டு, ஊழியர்கள் வீட்டிற்குச்சென்று விட்டனர்.
நள்ளிரவு, 2:30 மணியளவில், டாஸ்மாக் மதுக்கடையின் பின் பக்கம் உள்ள கதவை உடைத்து, திருடர்கள் உள்ளே செல்ல முயற்சித்துள்ளனர். மதுப்பெட்டிகள் அடுக்கப்பட்டிருந்த நிலையில், கதவை உள்ளே தள்ளும் போது, அவை உடைந்து, சத்தம் வந்துள்ளது. பாட்டில்கள் உடையும் சத்தம் கேட்டு, அருகிலுள்ளவர்கள் வந்த போது, திருடர்கள் தப்பி ஓடினர்.
திருடர்கள் மதுக்கடைக்குள் நுழைந்து, பணம் மற்றும் மது பாட்டில்களை திருட முயற்சித்துள்ளனர். பாட்டில்கள் உடைந்து நொறுங்கிய சத்தம் வந்ததால், தப்பி ஓடியுள்ளனர். இது குறித்து, அமராவதி நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.