ADDED : ஆக 27, 2024 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:காங்கயம், நத்தக்காடையூரை சேர்ந்தவர் கவுரிசங்கர், 28. அதே ஊரை சேர்ந்த பெண்ணிடம் கடந்த, ஒரு ஆண்டாக பேசி பழகி வந்தார். இவ்விஷயம் அப்பெண்ணின் கணவர் மகேந்திரன், 33 என்பவருக்கு தெரிந்தது. வாலிபரை கண்டித்தார். ஆனால், இருவரும் பேசி வந்தனர்.
இதனால், மகேந்திரன், அவரின் சகோதரர் மூர்த்தி மற்றும் நண்பர்கள் என, ஆறு பேர் கொண்ட கும்பல் கவுரிசங்கர் வீட்டுக்கு சென்று அவரை தாக்கி காரில் கடத்தி சென்றனர். வெள்ளோடு அருகே கவுரிசங்கரை இறக்கி விட்டு தப்பி சென்றனர். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த காங்கயம் போலீசார் மகேந்திரன், 33, மூர்த்தி, 32, திலீப், 25 ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள உமேஷ், சேது, சின்ராசு ஆகியோரை தேடி வருகின்றனர்.