/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆட்டோ டிரைவர் மரணம்; கொலையா என விசாரணை
/
ஆட்டோ டிரைவர் மரணம்; கொலையா என விசாரணை
ADDED : ஜூலை 28, 2024 11:11 PM
பல்லடம்:பல்லடம் அருகே ஆட்டோ டிரைவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடக்கிறது.
பல்லடம் அடுத்த, ஆறுமுத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 38; ஆட்டோ டிரைவர். மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
சதீஷ்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதன் காரணமாக, கணவன் - -மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன், சதீஷ்குமார் மது அருந்தி வந்தார். தம்பதி இடையே வாக்குவாதம் நீடித்தது. இதையடுத்து, தனது அண்ணன் மற்றும் தாய்மாமன் ஆகியோரை சதீஷ்குமாரின் மனைவி வரவழைத்தார். பேச்சுவார்த்தை நடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை சதீஷ்குமார் படுக்கையில் இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து சதீஷ்குமாரின் மனைவி பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உயிரிழந்த சதீஷ்குமாரின் தலையின் பின் பகுதியில், வீக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த பல்லடம் போலீசார், கொலையா அல்லது மாரடைப்பால் உயிரிழந்தாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.