/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மேம்பாலத்தில் இயங்காத தானியங்கி சிக்னல்
/
மேம்பாலத்தில் இயங்காத தானியங்கி சிக்னல்
ADDED : ஜூலை 25, 2024 10:27 PM

உடுமலை : உடுமலை தளி ரோடு மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள, தானியங்கி சிக்னல் வேலை செய்யாததால், விபத்துகள் அதிகரித்து வருகிறது.
உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் ரோட்டில், தளி ரோடு ரயில்வே மேம்பாலம் உள்ளது. இரு மாநிலங்களை இணைக்கும் வகையிலும், அமராவதி நகர், திருமூர்த்திமலை மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு பிரதான வழித்தடமாக உள்ளதால், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
மேம்பாலம் மற்றும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த எச்சரிக்கை செய்யும் வகையில், தானியங்கி சிக்னல் பொருத்தப்பட்டுள்ளது. இது பல மாதமாக இயங்காமல் வீணாக உள்ளது.
மேலும், எதிர், எதிரே வரும் வாகனங்கள், குறைவான வேகம் எச்சரிக்கை மற்றும் இணைப்பு ரோடுகள் குறித்து அறிவிப்பு பலகைகளும் இல்லை. இதனால், மேம்பாலத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு, உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
எனவே, மேம்பாலம் பகுதியில் தானியங்கி சிக்னல் இயங்கவும், வேகக்கட்டுப்பாடு, இணைப்பு ரோடுகள் குறித்து எச்சரிக்கை அறிவிப்பு பலகை அமைக்கவும், நெடுஞ்சாலைத்றை, போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

