/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சீசனுக்கு தேவையான விதைகள் இருப்பு
/
சீசனுக்கு தேவையான விதைகள் இருப்பு
ADDED : ஆக 06, 2024 06:25 AM
உடுமலை: குடிமங்கலம் வட்டாரத்தில், நடப்பு சீசன் சாகுபடிக்கு தேவையான விதை மற்றும் நுண்ணுயிர் உரங்கள் வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது:
குடிமங்கலம் வட்டாரத்தில், மொத்த நிகர சாகுபடி பரப்பான, 21,500 ெஹக்டேரில், தென்னை 15,500 ெஹக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 ஆயிரம் ெஹக்டேரில், மக்காச்சோளம், சோளம், கம்பு, பயறு வகை பயிர்கள், காய்கறி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.
வேளாண்துறை சார்பில், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் மற்றும் விதை கிராம திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டங்களின் கீழ், மக்காச்சோளம் விதை, 1000 கிலோ; சோளம், 500; கம்பு 200; உளுந்து, 5000; கொண்டைக்கடலை, 6000; பாசிப்பயறு 200 கிலோ இருப்பு வைக்கப்பட்டு, மானியத்தில் வினியோகிக்கப்பட உள்ளது.
நுண்ணுாட்ட உரங்கள்( பயறு வகை, தானிய வகை), நுண்ணுயிர் உரங்களானஅசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டீரியா, அசோபாஸ், பொட்டாஷ் பாக்டீரியா , ரைசோபியம்மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகளான டிவிரிடி, மெட்டாரைசியம், சூடோமோனாஸ் ஆகியவைதேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தேவைப்படும் விவசாயிகள், தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர் அல்லது வேளாண் உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.