/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆவணி அவிட்டம் விழா பூணுால் மாற்றும் நிகழ்ச்சி
/
ஆவணி அவிட்டம் விழா பூணுால் மாற்றும் நிகழ்ச்சி
ADDED : ஆக 19, 2024 11:37 PM

திருப்பூர்;ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, திருப்பூர் பகுதியை சேர்ந்த, 'ரிக்' மற்றும் 'யஜூர்' வேதத்தை பின்பற்றுவோர் நேற்று பூணுால் மாற்றிக்கொண்டனர்.
திருப்பூர் சபாபதிபுரம் ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி நடந்தது; பண்டித ஸ்ரீசேஷகிரி ஆச்சாரியார் தலைமையில், ஆவணி அவிட்ட விழா, வேதமந்திரங்கள் முழங்க நடந்தது. வேத ஆகமங்களை பின்பற்றி, முதலில் ரிக் வேத்தை பின்பற்றுபவர்களும், அடுத்ததாக யஜூர் வேதத்தை பின்பற்றுவோரும் பூணுால் மாற்றிக்கொண்டனர். விநாயகர் சதுர்த்தி விழாவின் போதும், சாம வேதத்தை பின்பற்றுவர் பூணுால் மாற்றுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
* திருப்பூர் ஓடக்காடு, ராமகிருஷ்ண பஜனை மடத்தில், ஆவணி அவிட்டம் பண்டிகை சிறப்பாக நடந்தது. ஸ்ரீனிவாச சர்மா உபாத்யாயத்தில், ரிக் மற்றும் யஜூர் வேதத்தை சேர்ந்தவர்கள், வேதமந்திரங்களை ஓதி, தங்கள் வேத ஆரம்பத்தை துவக்கினர்.
---
2 படங்கள்
ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, ஓடக்காடு, ராமகிருஷ்ண பஜனை மடத்தில், ஸ்ரீனிவாச சர்மா உபாத்யாயத்தில் ரிக் மற்றும் யஜுர் வேதத்தை சேர்ந்தவர்கள் தங்கள் வேத ஆரம்பத்தை தொடங்கினர்.
பார்க் ரோடு, ராகவேந்திரா கோவிலில் பூணுால் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

