ADDED : ஜூலை 14, 2024 11:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் (செப்., 5) ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. விருது பெற அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தகுதியான ஆசிரியர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. nationalawardsto teachers.education.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியானவர்களை முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான மாவட்டக்குழு தேர்வு செய்து, மாநிலக்குழுவுக்கு பரிந்துரைக்கும்.