ADDED : செப் 01, 2024 11:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்:பல்லடம் கடைவீதி, சந்தைப்பேட்டை ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் ஆக., 30ல் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 24 நாட்கள் மண்டல பூஜை நேற்று துவங்கியது. தேன், பால், தயிர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால், ஐயப்பனுக்கு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, சிறப்பு முத்தங்கி அலங்காரத்தில் ஐயப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும், ஐயப்ப பக்தர்கள் குழுவின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
---
பல்லடம், கடை வீதி, சந்தைப்பேட்டை ஐயப்பன் கோவில் கும்பாபிேஷகத்தைத் தொடர்ந்து, 24 நாள் மண்டல பூஜை நேற்று துவங்கியது. சிறப்பு முத்தங்கி அலங்காரத்தில் காட்சியளித்த ஐயப்பன்.