/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குலைதள்ளிய வாழைகள்; மின் ஊழியர்கள் வெட்டியதாக புகார்
/
குலைதள்ளிய வாழைகள்; மின் ஊழியர்கள் வெட்டியதாக புகார்
குலைதள்ளிய வாழைகள்; மின் ஊழியர்கள் வெட்டியதாக புகார்
குலைதள்ளிய வாழைகள்; மின் ஊழியர்கள் வெட்டியதாக புகார்
ADDED : பிப் 22, 2025 07:04 AM

அவிநாசி; அவிநாசி அருகே 200க்கும் மேற்பட்ட குலைதள்ளிய வாழைகளை மின் வாரியத்தினர் தன் அனுமதியின்றி வெட்டியதாக விவசாயி புகார் தெரிவித்துள்ளார்.
அவிநாசி தாலுகா, சின்னேரிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கருக்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர். விவசாயி. தனது 10 ஏக்கர் நிலத்தில் 3500க்கும் மேற்பட்ட கலப்பின ஜிண்டால் ரக நேந்திரன் வாழை பயிரிட்டு இருந்தார். இன்னும் 20 நாளில் வெட்டுவதற்கு தயாராக குலைதள்ளிய நிலையில் இருந்த 200க்கும் மேற்பட்ட வாழைகளை, உயரழுத்த மின் கம்பியில் உரசுவதாக கூறி மின் வாரியத்தினர் வெட்டியதாக பாலச்சந்தர் புகார் கூறுகிறார்.
ரூ.2 லட்சம் நஷ்டம்
அவர் கூறுகையில், ''பல்வேறு இயற்கை மற்றும் நோய் தாக்குதல்களிலிருந்து பராமரித்து மகசூல் தரும் நிலையில் குலை தள்ளியிருந்த வாழை மரங்களை வெட்டியது கண்டனத்துக்குரியது. தோப்பில் யாரும் இல்லாதபோது, இந்தச் செயலை செய்துள்ளனர். 2 லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. உரிய இழப்பீடு வழங்க வேண்டும்'' என்றார்.

