/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெள்வேல மரத்தில் பட்டை உரிப்பு: கள்ளச்சாராய கும்பல் கைவரிசையா?
/
வெள்வேல மரத்தில் பட்டை உரிப்பு: கள்ளச்சாராய கும்பல் கைவரிசையா?
வெள்வேல மரத்தில் பட்டை உரிப்பு: கள்ளச்சாராய கும்பல் கைவரிசையா?
வெள்வேல மரத்தில் பட்டை உரிப்பு: கள்ளச்சாராய கும்பல் கைவரிசையா?
ADDED : ஜூலை 08, 2024 05:29 PM

பொங்கலுார்:
கள்ளச் சாராயம் காய்ச்ச வெள்வேல மர பட்டைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பொங்கலுார் வட்டாரத்தில் முன்பு ஏராளமான நபர்கள் சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதி வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாலும், போலீசாரின் தொடர் நடவடிக்கைகளாலும் சாராயம் காய்ச்சுவது குறைந்து இருந்தது. கொரோனா காலத்தில் மட்டும் ஆங்காங்கே ஒரு சிலர் சாராயம் காய்ச்சி தங்கள் தேவைகளுக்கு குடித்து வந்தனர். இதனால், ஏராளமான வெள்வேல மரங்களிலிருந்து பட்டை மாயமாகி இருந்தது. கொரோனா தொற்று முடிவுக்கு வந்தபின் கள்ளச்சாராயம் காய்ச்சுவது ஓய்ந்து இருந்தது.
தற்பொழுது வெள்வேல மரத்தின் பட்டைகள் ஒருசில இடங்களில் மீண்டும் உரிக்கப்பட்டுள்ளது. இதனால், மீண்டும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது துவங்கியுள்ளதோ என்று பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது. பட்டை உரிக்கப்பட்ட மரங்கள் சில ஆண்டுகளில் பட்டுப்போக வாய்ப்பு உள்ளது. எனவே, கள்ளச்சாராயக் கும்பல்களிடமிருந்து வெள்வேல் மரங்களை காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
---
பி.ஏ.பி., வாய்க்கால் ஓரத்தில் உள்ள வெள்வேல மரத்தில் இருந்து சமீபத்தில் பட்டை உரிக்கப்பட்டுள்ளது.