sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கூடைப்பந்து: லிட்டில் பிளவர், விவேகானந்தா அபாரம்

/

கூடைப்பந்து: லிட்டில் பிளவர், விவேகானந்தா அபாரம்

கூடைப்பந்து: லிட்டில் பிளவர், விவேகானந்தா அபாரம்

கூடைப்பந்து: லிட்டில் பிளவர், விவேகானந்தா அபாரம்


ADDED : ஆக 16, 2024 11:23 PM

Google News

ADDED : ஆக 16, 2024 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;திருப்பூர் தெற்கு குறுமைய கூடைப்பந்து போட்டி, பிரன்ட்லைன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. பள்ளி தாளாளர் சிவசாமி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் துவக்கிவைத்தனர். 14, 17, 19 வயது பிரிவினருக்கு 'நாக்-அவுட்' முறையில் போட்டிகள் நடந்தன; மொத்தம், 20 அணிகள் பங்கேற்றன.

பதினான்கு வயது பிரிவினர் இறுதி போட்டியில் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவியர் 12-2 என்ற புள்ளிக்கணக்கில், விகாஸ் வித்யாலயா பள்ளி அணியை வென்றனர். பதினேழு வயது மாணவியர் பிரிவு போட்டியில் கடைசி வரை போராடிய, பிரன்ட்லைன் பள்ளி அணி, விவேகானந்தா வித்யாலயா பள்ளி அணியிடம், 8 - 12 என்ற புள்ளிக்கணக்கில் தோற்றது. பத்தொன்பது வயது மாணவியர் போட்டியில் அதிரடி புள்ளிகளை குவித்த செஞ்சுரி பவுண்டேசன் பள்ளி அணி, 23 - 10 என்ற புள்ளிக்கணக்கில், பிரன்ட்லைன் பள்ளி அணியை வென்றது.

பதினான்கு வயது பிரிவு மாணவருக்கான போட்டியில், லிட்டில் பிளவர் பள்ளி பிரன்ட்லைன் பள்ளி அணியை 29 - 19 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது.

மாணவர், 17 வயது பிரிவில், லிட்டில் பிளவர் பள்ளி அணி 21-6 என்ற புள்ளிக்கணக்கில் செஞ்சுரி பவுண்டேசன் பள்ளியை வென்றது.

மாணவர் பிரிவு மூன்று ஆட்டங்களில் மூன்றையும் லிட்டில் பிளவர் பள்ளி அணி கைப்பற்றி, அசத்தியது. மாணவியர் பிரிவில் மூன்று ஆட்டங்களில் இரண்டு ஆட்டங்களை விவேகானந்தா பள்ளி கைப்பற்றியது.

---

2 அல்லது 3 காலம்

திருப்பூர் தெற்கு குறுமைய கூடைப்பந்து போட்டி, பிரன்ட்லைன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதில் சென்சுரி பவுண்டேசன் மற்றும் பிரன்ட்லைன் பள்ளிகள் மோதின.






      Dinamalar
      Follow us