/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
படுக்கையறை தீயில் எரிந்தது; ஏ.சி., மின்கசிவு காரணமா?
/
படுக்கையறை தீயில் எரிந்தது; ஏ.சி., மின்கசிவு காரணமா?
படுக்கையறை தீயில் எரிந்தது; ஏ.சி., மின்கசிவு காரணமா?
படுக்கையறை தீயில் எரிந்தது; ஏ.சி., மின்கசிவு காரணமா?
ADDED : பிப் 27, 2025 11:56 PM

அவிநாசி: திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள சேவூர் வி.ஐ.பி., நகரில் வசிப்பவர், கோவிந்தசாமி, 53; எலாஸ்டிக் கம்பெனி உரிமையாளர்; மனைவி, மகன், மருமகளுடன் வசிக்கிறார்.
நேற்று காலை இவரது வீட்டின் மேல் தளத்தில் இருந்து புகை வந்துள்ளது. கோவிந்தசாமி சென்று பார்த்தபோது, அங்குள்ள படுக்கையறையில் தீப்பற்றி எரிந்துள்ளது. மர அலமாரி, கட்டில், பீரோ, டேபிள், சேர் ஆகியவை மளமளவென தீப்பிடித்து எரிந்தது. அவிநாசி தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அரை மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர்.
ஏ.சி., பெட்டி, ரிமோட் பயன்படுத்தி 'ஆன்' செய்யும் வகையில் இருந்தது; இதில், மின் கசிவு ஏற்பட்டதால் தீவிபத்து நடந்திருப்பதாக கூறப்படுகிறது. 'டிவி', பீரோவில் வைக்கப்பட்டிருந்த 55,000 ரூபாய் ரொக்கம், தங்க செயின் என 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமாயின.
மத்திய மின் துறை ஆற்றல் துறை பணியக மின் தணிக்கையாளர் அசோக் சேதுராமன் கூறுகையில், ''ஏ.சி.,க்கும், இணைப்பு ஒயருக்கும் இடையே 'சார்ட் சர்க்யூட்' ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. குறைந்த அல்லது உயர் மின் அழுத்தம் ஏற்படும்போது, 'ஸ்டெபிலைசர்' அதை தாங்கும் வகையில் இருக்கும். 'ஸ்டெபிலைசர்' பழுதாக இருந்திருந்தால், மின் நுகர்வோருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். இதுவும் தீவிபத்துக்கு காரணமாக அமைந்திருக்கலாம்'' என்றார்

