/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பேரு தான் 'சானிடரி' தெரு வீடுகளில் கழிவுநீர் சங்கமம்
/
பேரு தான் 'சானிடரி' தெரு வீடுகளில் கழிவுநீர் சங்கமம்
பேரு தான் 'சானிடரி' தெரு வீடுகளில் கழிவுநீர் சங்கமம்
பேரு தான் 'சானிடரி' தெரு வீடுகளில் கழிவுநீர் சங்கமம்
ADDED : ஆக 20, 2024 10:42 PM
திருப்பூர்;'பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை நீர், சானிடரி தெருவில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுவதால் ஏற்படும் சுகாதார கேடுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டது.
திருப்பூர், மங்கலம் மெயின் ரோட்டில் உள்ள பாதாள சாக்கடையில் தொடர்ந்து அடைப்பு ஏற்பட்டு, மெயின் ரோட்டுக்கு பின்புறமுள்ள வெங்கடாசலபுரம் சானிடரி தெரு, கிருத்திகா மருத்துவமனை ரோடு முழுக்க, பாதாள சாக்கடை நீர் வெளியேறி, வீடுகளுக்குள்ளும் புகுந்து விடுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.
இதுகுறித்து, வார்டு கவுன்சிலர் அன்பகம் திருப்பதி விடுத்த கோரிக்கை அடிப்படையில் மேயர் தினேஷ்குமார் அப்பகுதியை பார்வையிட்டார்.
கவுன்சிலர் கூறுகையில், 'கடந்த, 10 நாளாக மெயின் ரோட்டில் உள்ள பாதாள சாக்கடையை ஆய்வு செய்து, ரீசைக்கிளர் வாகனம் மற்றும் ஜெட்ராடு வாகனம் வாயிலாக, கழிவுநீரை அப்புறப்படுத்தினாலும், மீண்டும் மீண்டும் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை நீர், 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்துவிட்டது,' என்றார்.
அப்போது, 43வது வார்டு கவுன்சிலர் சாந்தாமணியும், சில கோரிக்கைகளை முன்வைத்தார். இப்பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு, மேயர் அறிவுறுத்தினார்.