/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பாரத் டெக்ஸ் - 2025' கண்காட்சி துவங்கியது! பின்னலாடைகளுக்கு பிரத்யேக அரங்கு
/
'பாரத் டெக்ஸ் - 2025' கண்காட்சி துவங்கியது! பின்னலாடைகளுக்கு பிரத்யேக அரங்கு
'பாரத் டெக்ஸ் - 2025' கண்காட்சி துவங்கியது! பின்னலாடைகளுக்கு பிரத்யேக அரங்கு
'பாரத் டெக்ஸ் - 2025' கண்காட்சி துவங்கியது! பின்னலாடைகளுக்கு பிரத்யேக அரங்கு
ADDED : பிப் 15, 2025 07:14 AM
திருப்பூர்; 'பாரத் டெக்ஸ் -2025' சர்வதேச ஜவுளி கண்காட்சியில், பின்னலாடை தொழில்பிரிவுக்கு பிரத்யேக அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் மற்றும் தொழில் வளர்ச்சி கவுன்சில்கள் சார்பில், 'பாரத் டெக்ஸ்' கண்காட்சி டில்லியில் நடத்தப்படுகிறது. இரண்டாம் ஆண்டு கண்காட்சி, நேற்று துவங்கி, 17ம் தேதி வரை நடக்க உள்ளது. புதுடில்லி பாரத் மண்டபத்தில் நடக்கும் கண்காட்சியில், பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு பிரத்யேக அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
சர்வதே ஜவுளி கண்காட்சியை பார்வையிட, 120 நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள், வர்த்தக முகமைகள் வந்துள்ளன. திருப்பூரின் பசுமை சார் உற்பத்தி திறமைகளையும், சாதனைகளையும் காட்சிப்படுத்த ஏதுவாக, 40 ஏற்றுமதி நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கண்காட்சியை திறந்து வைத்தார். இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிடா, செயலாளர் ஷமி நீலம் ராவ், கூடுதல் செயலர் ரோஹித் கல்சால் மற்றும் கவுன்சில் தலைவர்கள் மற்றும் கண்காட்சி நிர்வாகிகள், கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டனர்.
நாடு முழுவதும் உள்ள ஜவுளித்துறையினர், கண்காட்சியில் முகாமிட்டுள்ளனர். பஞ்சு, நுாலிழை, துணி ரகங்கள், ஆடைகள், மதிப்பு கூட்டப்பட்ட ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தொழில் வளர்ச்சி வாய்ப்புகளை பகிர்ந்துகொள்ளும் சிறப்பு கருத்தரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
'பாரத் டெக்ஸ்' கண்காட்சி குறித்து ஏ.இ.பி.சி., துணை தலைவர் சக்திவேல் கூறியதாவது:
மிகுந்த எதிர்பார்ப்புடன், 'பாரத் டெக்ஸ் -2025' கண்காட்சி, புதுடில்லியில் துவங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஜவுளித்துறை முன்னோடிகள் பங்கேற்றுள்ளனர். மொத்தம், 3,600 நிறுவனங்கள் 'ஸ்டால்' அமைத்துள்ளன. பின்னலாடை வர்த்தகம் செய்யும் முன்னணி வர்த்தக நிறுவன பிரதிநிதிகள், 1500 பேர் பார்வையிட வந்துள்ளனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,000க்கும் அதிகமான வர்த்தகர்கள் கண்காட்சியை பார்வையிடுவார்கள். திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் கோரிக்கையை ஏற்று, பின்னலாடை பிரிவுக்கு பிரத்யேக அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூரின், 40 முன்னணி ஏற்றுமதி நிறுவனங்கள் 'ஸ்டால்' அமைத்துள்ளனர். 'வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி' என்ற சாதனையை வெளிப்படுத்தும் வகையில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் ஸ்டால் அமைத்துள்ளனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.
ஏ.இ.பி.சி., துணை தலைவர் சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், பொதுசெயலாளர் திருக்குமரன், துணை தலைவர்கள் இளங்கோவன், ராஜ்குமார், இணை செயலாளர் குமார் துரைசாமி ஆகியோர், மத்திய ஜவுளித்துறை செயலர் நீலம் ஷமி ராவ், தமிழக ஜவுளித்துறை இயக்குனர் லலிதா உள்ளிட்டோருடன், கண்காட்சியில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பங்களிப்பு குறித்து விவரித்தனர்.