/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திட்ட பணிகளை துவக்க துங்காவியில் பூமி பூஜை
/
திட்ட பணிகளை துவக்க துங்காவியில் பூமி பூஜை
ADDED : ஆக 29, 2024 10:08 PM
உடுமலை : மடத்துக்குளம் பகுதியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் பல்வேறு திட்ட பணிகளை மேற்கொள்ள பூமி பூஜை நடந்தது.
மடத்துக்குளம் அருகே, கணியூர் ஆரம்ப சுகாதார வளாகம் அருகில் பயணியர் நிழற்கூரை மற்றும் உடையார்பாளையத்தில் ஆழ்துளை கிணறுடன் கூடிய தொட்டி அமைக்க எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில், 19 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பணிகள் நிறைவு பெற்று, மக்கள் பயன்பாட்டுக்கு நிழற்கூரை திறக்கும் விழா நேற்று நடந்தது.
மடத்துக்குளம் எம்.எல்.ஏ., மகேந்திரன், தலைமை வகித்தார். ஜோத்தம்பட்டி ஊராட்சி தலைவர் செந்தில்குமார். ஒன்றிய குழு உறுப்பினர் திவ்யபாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதே போல், துங்காவி ஊராட்சியில், 3 இடங்களில், பயணியர் நிழற்கூரை அமைக்க, 21.60 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகளை துவக்க பூமி பூஜை நடந்தது.

