நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
- நமது நிருபர் -
திருப்பூரில் நடந்த சைக்கிள் போட்டியில் மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
திருப்பூர் ரைடர்ஸ் கிளப், ஹேப்பி சைக்கிள்ஸ் ஆகியன சார்பில் சைக்கிள் போட்டி, முதலிபாளையம் பிரிவில் நடந்தது. 16 வயது; 20 வயதுக்கு உட்பட்டோர் என இரு பாலருக்கும் போட்டிகள் தனித்தனியாக நடந்தன.
இருபது வயதுக்கு உட்பட்டோருக்கு அபாகஸ் பள்ளியில் துவங்கி, பெருந்தொழுவு வழியாக அவிநாசிபாளையம் திருச்சி ரோடு வரை, 20 கி.மீ., துாரமும், 16 வயதுக்கு உட்பட்டோருக்கு, 15 கி.மீ., துாரமும் போட்டி நடந்தது.
மாணவியர் பிரிவில் ஹர்சிகா, மாணவர் பிரிவில் விகாஸ் ராகவ், ஹரின் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, பதக்கம் வழங்கப்பட்டது.