/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆபத்தை உணராத அதிகாரிகள் மீண்டும் முளைத்த விளம்பர பலகைகள்
/
ஆபத்தை உணராத அதிகாரிகள் மீண்டும் முளைத்த விளம்பர பலகைகள்
ஆபத்தை உணராத அதிகாரிகள் மீண்டும் முளைத்த விளம்பர பலகைகள்
ஆபத்தை உணராத அதிகாரிகள் மீண்டும் முளைத்த விளம்பர பலகைகள்
ADDED : செப் 03, 2024 12:33 AM

அவிநாசி;அவிநாசி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், மீண்டும் விளம்பர பலகை வைப்பது அதிகரித்து வருகிறது.
அவிநாசி, தெக்கலுார் அருகே கடந்த ஒரு ஆண்டுக்கு முன், 40 அடி உயரம் கொண்ட விளம்பர பலகை அமைக்கும் பணியின் போது, விளம்பரப்பலகை சரிந்து மூன்று பேர் உயிரிழந்தனர். அதன்பின், மாவட்ட நிர்வாகம் அவசர கதியில் விளம்பரப் பலகைகளுக்கு கட்டுப்பாடு விதித்தது.
குறிப்பக, சாலை ஓரங்களிலும் கட்டடங்களின் மேல் பகுதியிலும் உயரமான இடங்களிலும் எந்த ஒரு விளம்பரப் பலகைகளும் வைக்க கூடாது என உத்தரவு பிறப்பித்தது.
தற்போது அந்த உத்தரவை மீறி, கோவை - சேலம் பைபாஸ் ரோட்டில், தெக்கலுார், கருமத்தம்பட்டி, பெருமாநல்லுார் செல்லும் வழியில், சர்வீஸ் ரோட்டின் ஓரத்தில் பிரமாண்டமாக 20 முதல் 50 அடி உயரமும் கொண்ட விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இவை பெரும்பாலும் முறையாக உறுதியாக நடப்படாமல் ஏனோதானோ என்று ஆங்காங்கே குழிகளைத் தோண்டி கான்கிரீட் கலவை ஊற்றி நட்டு வைத்து விடுகின்றனர். பலத்த காற்றின் போது முழுவதுமாக பெயர்ந்து சாலைகளில் செல்லும் டூவீலர் மற்றும் வாகனங்களின் மீது விழுவதால் உயிர்ப்பலி ஏற்படுத்தும் என பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
இவ்வாறு விளம்பர பலகை வைக்க இவர்கள் யாரிடம் அனுமதி பெற்றார்கள், அனுமதி கொடுத்தது யார், நெடுஞ்சாலைத் துறையினரும், போலீசாரும், மாவட்ட நிர்வாகமும் ஏன் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். உடனடியாக விளம்பரப்பலகைகளை அகற்றி ஆபத்தை தடுக்க வேண்டும்.
---
தெக்கலுார் செல்லும் வழியில் உள்ள விளம்பர பலகைகள்.