ADDED : செப் 15, 2024 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: துவக்கப்பள்ளி மாணவர்களிடம் சிறுசேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், தன்னார்வலர்கள் சார்பில் உண்டியல் வழங்கப்பட்டது.
புதுராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில், 328 மாணவ , மாணவியர் பயின்று வருகின்றனர்.மாணவரிடம் சிறுசேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், 3,800 ரூபாய் மதிப்புள்ள உண்டியல்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாநகராட்சி மண்டல தலைவர் கோவிந்தராஜ், மாணவ, மாணவியருக்கு உண்டியல்கள் வழங்கி, சிறுசேமிப்பு திட்டத்தை துவக்கி வைத்தார்.
பள்ளி வளர்ச்சிக்குழு பொறுப்பாளர் கார்த்திகேயன், தலைமை ஆசிரியர் (பொ) மோகன், நன்கொடையாளர்கள் பங்கேற்றனர்.