/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம் உறுதி
/
பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம் உறுதி
ADDED : ஏப் 18, 2024 04:36 AM

திருப்பூர் : திருப்பூர் தொகுதிபா.ஜ., வேட்பாளர் முருகானந்தம் கடந்த, இரு வாரங்களாக தங்களது கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து, ஆறு சட்டசபை தொகுதி வாரியாக சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு பகுதியில் தொழிலாளர்கள், விவசாயிகள் என, பல தரப்பு மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். பா.ஜ., தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள், தற்போது உள்ள தொலை நோக்கு திட்டங்கள் குறித்து கேட்டு மக்கள் மத்தியில் ஓட்டு சேகரித்தார். செல்லும் இடங்கள் எல்லாம் மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
நேற்று திருப்பூர் வடக்கு மற்றும் பெருந்துறை பகுதியில் டூவீலர், நடைபயணம் பிரசாரம் மேற்கொண்டு இறுதி கட்ட ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக கொண்டு வரப்படும். மோடியின் நேரடி வேட்பாளர் என்று மக்களிடம் வாக்குறுதி அளித்தார்.
''கடந்த கால எம்.பி.,க்களை போல் நான் இருக்க மாட்டேன். உங்களுக்கான, ஊருக்கான வளர்ச்சி திட்டங்கள் மீது கவனம் செலுத்தி, நிதி கேட்டு பெற்று வருவேன். நீங்கள் எளிதாக என்னை தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்கலாம். உங்களுடன் பா.ஜ., என்றும் துணையாக இருக்கும்'' என்றும் தெரிவித்தார்.

