/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்க விழிப்புணர்வு
/
குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்க விழிப்புணர்வு
ADDED : ஆக 07, 2024 10:54 PM

உடுமலை இன்னர் வீல் கிளப் சார்பில், கணியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாலுாட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தாய்ப்பால் வழங்குவதன் அவசியம், கருப்பை புற்றுநோய் பரிசோதனைகள், அதற்கான விழிப்புணர்வு குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலுாட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகளுக்கு பழங்கள், பாதாம், முந்திரி பருப்புகள் வழங்கப்பட்டன. உடல்நலம் சார்ந்த மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதன் அவசியம் குறித்த, விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வினியோகிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில், உடுமலை இன்னர் வீல் சங்க தலைவர் டாக்டர் ரமாதேவி, செயலாளர் கோதைநாயகி, பொருளாளர் ரேணுகாலட்சுமி மற்றும் உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கணியூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் இளங்கோ, சிந்துபார்கவி, ஊரக மருத்துவ செயலாளர் தாமரைக்கண்ணன், ரோட்டரி கிளப் நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, விழிப்புணர்வு பேரணி நடந்தது.
* பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், தாய்ப்பால் வார விழா கடந்த, 1ம் தேதி முதல் நேற்று வரை கொண்டாடப்பட்டது. நிறைவு நாளான நேற்று, பொள்ளாச்சி ரோட்டரி ராயல் கிளப்புடன் இணைந்து விழா கொண்டாடப்பட்டது. குழந்தைகள் நல பிரிவு தலைமை டாக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். டாக்டர்கள் அமுதா, சிவசங்கர் மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.
விழாவில், ரோட்டரி ராயல்ஸ் கிளப் சார்பில், பிரசவமான தாய்மார்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகம் கொடுக்கப்பட்டது. மேலும், தாய்ப்பால் வங்கிக்கு தாய்ப்பால் தானமாக கொடுக்கும் தாய்மார்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- நிருபர் குழு -