/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மணப்பெண் விபத்தில் பலி பொதுமக்கள் சாலை மறியல்
/
மணப்பெண் விபத்தில் பலி பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : பிப் 27, 2025 01:14 AM

திருப்பூர்:மார்ச் 2ல் திருமணம் நடைபெறுவதாக இருந்த பெண், திருப்பூர் அருகே நடந்த விபத்தில் பலியானார்.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அடுத்த செங்கப்பள்ளி, சென்னிமலைப்பாளையத்தை சேர்ந்தவர் நிர்மலா, 22. இவருக்கு மார்ச் 2ல் திருமணம் நடைபெற இருந்தது. கடந்த 22ல், தாய் சரஸ்வதி, அக்கா மகன் ஆகியோரை டூ - வீலரில் நிர்மலா அழைத்து கொண்டு, திருப்பூர் - ஊத்துக்குளி ரோட்டில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம், டூ - வீலர் மீது மோதியது.
கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிர்மலா, நேற்று அதிகாலை இறந்தார். இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய நபர் மற்றும் வாகனத்தை கண்டுபிடிக்க வலியுறுத்தி, நிர்மலாவின் குடும்பத்தினர், கிராம மக்கள் ஊத்துக்குளியில் நேற்று மாலை மறியலில் ஈடுபட்டனர். காங்கயம் டி.எஸ்.பி., மாயவன் உள்ளிட்ட போலீசார் பேச்சு நடத்தினர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, பெண்ணின் குடும்பத்தினர் கோவையிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.