/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஏற்றுமதியாளர்களுடன் பிரிட்டன் நிறுவனத்தினர் சந்திப்பு
/
ஏற்றுமதியாளர்களுடன் பிரிட்டன் நிறுவனத்தினர் சந்திப்பு
ஏற்றுமதியாளர்களுடன் பிரிட்டன் நிறுவனத்தினர் சந்திப்பு
ஏற்றுமதியாளர்களுடன் பிரிட்டன் நிறுவனத்தினர் சந்திப்பு
ADDED : மார் 29, 2024 12:58 AM
திருப்பூர்;பிரிட்டனைச் சேர்ந்த பிரபலமான பிரைமார்க் நிறுவன இயக்குனர்கள் நேற்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் ஏற்றுமதியாளர்களுடன் சந்திப்பு மேற்கொண்டனர்.
பிரிட்டனின் ஆயத்த ஆடை வர்த்தக நிறுவனமான பிரைமார்க் நிறுவனத்தைச் சேர்ந்த, வளம் குன்றா வளர்ச்சி உற்பத்தி கோட்பாட்டை கையாளும் அசோசியேட்டட் பிரிட்டிஷ் புட்ஸ் நிறுவன, சட்ட சேவை இயக்குநர், நிறுவன செயலாளர் பால் ஏ லிஸ்டர்; சுற்றுச்சூழல் நிலைத்தன்மை இயக்குநர் பீ ஆங் மற்றும் நெறிமுறை வர்த்தக மூத்த மேலாளர் ரூத் மார்ட்டின் உள்ளிட்டோர் அடங்கிய குழு, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்திற்கு வருகை புரிந்தனர்.
சங்கத் தலைவர் சுப்ரமணியம் மற்றும் திருப்பூர் தொழில்வளம் பங்களிப்போர் அமைப்பின் தலைவர் இளங்கோவன் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து பேசினர். இதில் செயின்ட் ஜான் மருத்துவக் கல்லுாரியினரும் பங்கேற்றனர்.
பால் ஏ லிஸ்டர், வளம் குன்றா வளர்ச்சி உற்பத்திக் கோட்பாட்டின் முக்கியத்துவம், 2030ம் ஆண்டுக்குள் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் மிகக் கடுமையாக அமல் படுத்தக்கூடிய சூழல் குறித்தும் பேசினார்.
2030ம் ஆண்டுக்குள்...
திருப்பூர் எந்தளவு, வளம் குன்றா வளர்ச்சி கோட்பாட்டை பின்பற்றி வருகிறது. அதற்கான அங்கீகாரம், தங்களால் எந்த அளவு உதவ முடியும் என்பது குறித்து கலந்து பேசி, 2030க்குள் சிறப்பாக தயாராகலாம் என்று உறுதிஅளித்தார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்ரமணியம் பேசியதாவது:
வளம் குன்றா வளர்ச்சி கோட்பாட்டின் கீழ் உற்பத்தியை மேற்கொள்வதற்கான அனைத்து விழிப்புணர்வுகளையும் தொழிற்துறையினர் மத்தியில் ஏற்படுத்தி வருவது குறித்து விளக்கினார். கடந்த 20 ஆண்டாக இதற்கான ஆயத்தப் பணிகளை முன்னெடுத்து வருகிறது.
வரும், 2030ம் ஆண்டு அமலுக்கு வரக்கூடிய ஐரோப்பிய சட்டத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய திருப்பூர் நிறுவனங்களை தயார் செய்வதே சங்கத்தின் முதன்மை பணி. இந்த செயல்களை எல்லாம் ஆவணப்படுத்தி அங்கீகாரம் பெற்றுத் தருவதற்கான முன்னெடுப்பாக உள்ளது. சர்வதேச அளவில் அதிக வர்த்தகம் கிடைக்க கூடிய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
பொருளாளர் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், ''ஏற்கனவே திருப்பூரில் பின்பற்றப்படும் பூஜ்ய முறை சுத்திகரிப்பு; மரபு சாரா மின் உற்பத்தி; மரக்கன்று நடுதல், குளம் குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் துார் வாருதல்,'' குறித்து விளக்கினார்.
இணை செயலாளர் குமார் துரைசாமி, வளம் குன்றா வளர்ச்சி உற்பத்தி கோட்பாட்டின் கீழ் திருப்பூரில் நடைபெறும் உற்பத்தி நிலை, எஸ்.டி.ஜி., கோல்ஸ் விளக்கங்களையும், தொழிற்துறை திருப்பூர் தொழிலாளர்கள், மக்கள் நன்மைக்காக மேற்கொண்டுள்ள அரசு பள்ளிகளை தத்தெடுத்தல்; அரசுடன் இணைந்து சாலை வசதி; புற்று நோய் சிகிச்சை மருத்துவமனை; டயாலிசிஸ் சென்டர்; மழை நீர் சேகரிப்பு; மருத்துவ முகாம்; பெண்களுக்கான மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்று நோய் பரிசோதனை முகாம்கள்; பெண்களுக்கு அதிக பணி வாய்ப்பு ஆகியன குறித்து பேசினார்.
சங்க செயற்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியம் நன்றி கூறினார்.

