/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
ADDED : ஜூலை 24, 2024 08:32 PM

உடுமலை : உடுமலையில், குழாய் உடைந்து, குடிநீர் வீணாகி வருவதோடு, ரோடும் குண்டும், குழியுமாக மாறியுள்ளது.
உடுமலை ராஜேந்திரா ரோடு மற்றும் வெங்கடகிருஷ்ணா ரோடு சந்திக்கும் பகுதியில், நகராட்சி குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைந்து, அதிகளவு நீர் வெளியேறி வருகிறது.
ஒரு மாதமாக குடிநீர் வெளியேறி வருவதோடு, ரோட்டில் குளம் போல் தேங்கி, ரோடும் சேதமடைந்து வருகிறது. பிரதான ரோடு சந்திப்பு பகுதி, குண்டும், குழியுமாக மாறியுள்ளதால் ,விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.
நகராட்சி சந்தை, வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ள பகுதியில், குடிநீர் வெளியேறி, சேறும், சகதியுமாக மாறியுள்ளதோடு, கழிவு நீருடன் சேர்ந்து சுகாதார கேடு ஏற்படுத்தி வருகிறது.

