/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய நெடுஞ்சாலையில் முறிந்த மரம்
/
தேசிய நெடுஞ்சாலையில் முறிந்த மரம்
ADDED : ஜூன் 24, 2024 02:08 AM

பல்லடம்:பல்லடம், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. போக்குவரத்து நிறைந்த இந்த ரோட்டில் இருந்த செங்கொன்றை மரம் ஒன்று திடீரென நேற்று காலை 8:00 மணியளவில் முறிந்து விழுந்தது.
அதிர்ஷ்டவசமாக வாகன ஓட்டிகள் யாரும் அவ்வழியாக செல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது.
முறிந்து விழுந்த மரம், தேசிய நெடுஞ்சாலையில் பாதியை ஆக்கிரமித்தது. வாகன ஓட்டிகள் மரத்திலிருந்து விலகிச் சென்றனர்.
மரம் விழுந்த இடத்துக்கு அருகில் தான் டி.எஸ்.பி., அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், போலீஸ் குடியிருப்பு உள்ள நிலையில், போலீசார், நெடுஞ் சாலைத் துறையினர், நகராட்சியினர் என, யாருமே கண்டு கொள்ளவில்லை.
மதியம், 1:00 மணிக்கு மேல் ஆகியும், முறிந்து விழுந்த மரம் அகற்றப்படவில்லை. இதையடுத்து, சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர், மரத்தை அகற்ற ஆட்களை திரட்டி வந்தனர். இதற்குள் மரம் அங்கிருந்து அகற்றப்பட்டது.