/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எரியூட்டப்படும் குப்பை; இரவில் மக்கள் அவதி
/
எரியூட்டப்படும் குப்பை; இரவில் மக்கள் அவதி
ADDED : ஜூலை 24, 2024 11:55 PM

திருப்பூர் : 'கணியாம்பூண்டியில் குப்பை எரியூட்டப்படும் செயல் தொடர்ந்து நடந்து வருகிறது' என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கணியாம்பூண்டி ஊராட்சிப் பகுதியில், துாய்மைப் பணியாளர்களால் வீடு, கடை உள்ளிட்ட இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை, ஆங்காங்கே எரியூட்டப்படுவது வழக்கமாகவே இருக்கிறது. தற்போது, சில இடங்களில் இரவு நேரங்களிலும் குப்பை எரியூட்டப்படுகிறது.
கணியாம்பூண்டி வளர்ச்சிக்குழு தலைவர் ரஹீம் அங்குராஜ் கூறுகையில், ''கணியாம்பூண்டி பகுதியில், குப்பை எரியூட்டப்படும் நிகழ்வு தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கிறது. இதனால், அருகே வசிப்பவர்களுக்கு சுவாசப் பிரச்னை ஏற்படுகிறது. திடக்கழிவு மேலாண்மையில், ஊராட்சி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார்.

