ADDED : பிப் 25, 2025 10:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை,; உடுமலை அருகே கொமரலிங்கத்தில், பஸ் ஸ்டாண்ட் இல்லாததால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
உடுமலை - பழநிக்கு மடத்துக்குளம், கொழுமம் வழியாக இரண்டு வழித்தடங்கள் உள்ளன. இதில், கொழுமம் தடத்தில், கொமரலிங்கம் அப்பகுதியிலுள்ள பல்வேறு கிராமங்களின் முக்கிய சந்திப்பாக உள்ளது.
ஆனால் இங்கு பஸ் நிறுத்தம் மட்டுமே உள்ளதால், காலை, மாலை நேரங்களில் பஸ்கள் நிற்க இடமின்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, கொமரலிங்கத்தில் அனைத்து பஸ்களும் நின்ற செல்லும் வகையில், பேரூராட்சி நிர்வாகத்தினர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.