/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வினாடி-வினா எழுத்து தேர்வு மாணவர்களுக்கு அழைப்பு
/
வினாடி-வினா எழுத்து தேர்வு மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : ஆக 13, 2024 01:42 AM
--- நமது நிருபர் -
திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் கூறியிருப்பதாவது: 'தீன் தயாள் ஸ்பர்ஷ் யோஜனா' என்ற ஊக்கத்தொகை திட்டத்துக்கு தபால்தலை சேகரிப்பு கணக்கு வைத்துள்ள, 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் இணைந்தவர்களுக்கு வினாடி-வினா எழுத்துத் தேர்வு, வரும், செப்., 28ம் தேதி அகில இந்திய அளவில், நடக்கிறது. போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ஒரு ஆண்டுக்கு மாதம், 500 ரூபாய் வீதம் அவரவர் தபால் சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும். இப்போட்டியில் பங்கேற்க செப்., 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு: 04212239785; otirupur.tn.@indiapostgov.in.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

