/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆட்டோ ஓட்டி, 'அயர்னிங்' செய்து பிரசாரம்
/
ஆட்டோ ஓட்டி, 'அயர்னிங்' செய்து பிரசாரம்
ADDED : மார் 31, 2024 04:02 AM

திருப்பூர்: திருப்பூர் தொகுதியில் பா.ஜ., - அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணி என, மும்முனை போட்டி இத்தேர்தலில் நிலவுகிறது. ஓட்டு சேகரிப்பில் ஒவ்வொரு வேட்பாளரும் வித விதமான முறையில் வாக்காளர்களை சந்தித்து ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், திருப்பூர் பா.ஜ., வேட்பாளர் முருகானந்தம் எஸ்.வி., காலனியில் அமைப்பு சாரா ஆட்டோ தொழிலாளர்களை சந்தித்து ஓட்டு சேகரித்தார். அங்கிருந்த ஆட்டோ ஒன்றை ஓட்டிய படி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
குடோன் வீதியில் பனியன் துணி வியாபாரிகளை சங்கம் நிர்வாகிகளை சந்தித்தார். பனியன் தொழிலை காப்பாற்ற வலியுறுத்தி சங்க நிர்வாகிகள் பனியன் துணியை அணிவித்தனர். கணக்கம்பாளையத்தில் உள்ள பனியன் நிறுவனம் ஒன்றில், அயர்னிங் செய்தபடி, அங்கிருந்த தொழிலாளர்களிடம் ஹிந்தி பேசியபடி ஓட்டு சேகரித்தார். பின், அப்பகுதியில் கோவிலில் வழிபாடு செய்தார். பின், மக்களை சந்தித்தார். அப்பகுதியில் மேம்படுத்தப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள், வேட்பாளரிடம் தெரிவித்தனர்.

