த.வெ.க., பிரசாரத்துக்கு இடையூறு: தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் கைது
த.வெ.க., பிரசாரத்துக்கு இடையூறு: தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் கைது
ADDED : செப் 27, 2026 11:00 PM

திருப்பூர்: தாராபுரம் அருகே, த.வெ.க., வேட்பாளர் பிரசாரத்துக்கு இடையூறு செய்ததாக, எட்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபு ரம் தொகுதி த.வெ.க., வேட்பாளர் சத்யபாமா நேற்று முன்தினம் இரவு குண்டடம், பொட்டிக்காம்பாளையத்தில் பிரசாரத்துக்கு சென்றபோது, தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிரசாரத்தை ரத்து செய்து, அடுத்தடுத்த பகுதிகளுக்கு சத்யபாமா சென்றார்.
அவரை சிலர், டூ - வீலர்களில் பின்தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்.பி., சிருஷ்டி சிங் உள்ளிட்ட போலீசார், அவர்களை தடுத்தபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பிரசாரத்துக்கு இடை யூறு ஏற்படுத்தியதாக, 17 வயது வாலிபர் உட்பட, எட்டு பேரை குண்டடம் போலீசார் கைது செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., - அ.தி.மு.க.,வினர், போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்திய பின், அவர்கள் கலைந்து சென்றனர்.
