/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நம்பர் பிளேட்' விதிமீறல் தடுக்கப்படுமா?
/
'நம்பர் பிளேட்' விதிமீறல் தடுக்கப்படுமா?
ADDED : மே 07, 2024 11:56 PM

திருப்பூர்:வாகனங்களில் பொருத் தியுள்ள, 'நம்பர் பிளேட்' எழுத்துக்களை முறைப்படுத்தும் பணியை, போலீசார் துவக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மோட்டார் வாகன சட்டப்படி, வாகனங்களில் பதிவு எண் பொருத்த வேண்டியது கட்டாயம். அதற்காக, அனைத்து மோட்டார் வாகனங்களிலும், 'நம்பர் பிளேட்' பொருத்தப்படுகிறது. 'நம்பர் பிளேட்' பொருத்துவதிலும், பல்வேறு விதிமுறைகள் உள்ளன; சரிவர பயன்படுத்தி வந்தாலும், காலப்போக்கில் அதிலும் விதிமீறல் வந்துவிட்டது.
'நம்பர் பிளேட்' பொருத்தும் நோக்கமே, பதிவு எண்கள் நன்கு தெரிய வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், 'நம்பர் பிளேட்'களில், கவிதை வரிகளையும் திணித்துவிடுகின்றனர். அதுமட்டுமல்ல, போலீஸ், 'பிரஸ் - மீடியா', ரெவின்யூ, கோர்ட், மாநகராட்சி, நகராட்சி டி.என்.இ.பி., - ட்வார்டு' என்றெல்லாம், தங்கள் பணியை குறிப்பிடும் வகையிலும், வண்ண எழுத்துக்களால் நம்பர் பிளேட்டில் எழுதுகின்றனர்.
மோட்டார் வாகன சட்டப்படி, 'நம்பர் பிளேட்' டில் இதர எழுத்துக்கள் இடம்பெறக்கூடாது; அதற்கு, அபராதம் விதிக்கவும் வாய்ப்புள்ளது. பல்வேறு மாவட்டங்களில், போலீசார் 'நம்பர் பிளேட்' சரிபார்ப்பு பணிகளை துவக்கிவிட்டனர். விதிமுறைகளை மீறி, பொருத்திய 'நம்பர் பிளேட்' அகற்றுவதுடன், அதற்கு அபராதம் விதித்தும் வருகின்றனர்.
இருப்பினும், திருப்பூர் போலீசாருக்கு இன்னும் அதற்கான உத்தரவு வரவில்லையோ என்று கூறும் அளவுக்கு, 'நம்பர் பிளேட்' சரிபார்ப்பு பணி துவங்கவே இல்லை. தேர்தல் பணி என்று கூறுவதற்கு பதிலாக, போக்குவரத்து போலீசார் களத்தில் இறங்கி,'நம்பர் பிளேட்' முறைப்படுத்தும் பணிகளை முடுக்கிவிட வேண்டும்.

