தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பி.ஏ.பி., கால்வாய் துார் வாரும் பணி விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு

 பி.ஏ.பி., கால்வாய் துார் வாரும் பணி விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு

 பி.ஏ.பி., கால்வாய் துார் வாரும் பணி விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு


ADDED : செப் 28, 2026 09:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 09:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: தாராபுரம் இடைத்தேர்தல் காரணமாக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், பி.ஏ.பி. கிளைக் கால்வாய்களில் தூர்வாரும் பணிகளுக்கான டெண்டர் கோருவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், ரூ.14.98 கோடி மதிப்பிலான துார்வாரும் பணிகளுக்கு டெண்டர் கோருவதற்கான முன்மொழிவுக்கு தேர்தல் கமிஷன் தடையின்மை சான்று வழங்கியுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், துார்வாரும் பணிகளுக்கான டெண்டர் கோருவதற்கு தேர்தல் கமிஷனின் அனுமதி பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது அனுமதி கிடைத்துள்ளதால், டெண்டர் பணிகளை விரைவுபடுத்தி, கால்வாய் துார்வாரும் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதேவேளை, துார்வாரும் பணிகளால் எந்தவொரு தனிநபரோ அல்லது அரசியல் கட்சியோ அரசியல் ஆதாயம் பெறாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.

பி.ஏ.பி. கிளைக் கால்வாய் (காங்கயம்-வெள்ளகோவில்) நீர் பாதுகாப்பு சங்கத் தலைவர் வேலுசாமி கூறியதாவது:

தற்போது தேர்தல் கமிஷன் அனுமதி கிடைத்துள்ளதால், ஒரு வாரத்தில் பணிகள் தொடங்கி, அடுத்த ஒரு வாரத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கிறோம். பணிகள் முடிந்த 15 நாட்களுக்குள் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் லாரிகள் மூலம் தண்ணீர் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கால்வாய் துார்வாரும் பணிகளை விரைந்து முடித்து, பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும்.

தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ரூ.14.98 கோடி நிதி, பி.ஏ.பி. 2 மற்றும் 3-வது மண்டலங்களின் துார்வாரும் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளது. பணிகளை தாமதமின்றி முடிப்பதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us